ராஜபாளையத்தில் ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

54பார்த்தது
ராஜபாளையம் கீழ ஆவரம்பட்டியை சேர்ந்த அய்யாசாமி. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதி சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் திருமணம் ஆகி அமுதா, மேகலா, ராதிகா, ராம பிரபா, லட்சுமி பிரபா என்ற 5பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் ஐயாச்சாமி, ஒத்தப் பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். தனது ஐந்து மகள்களையும் திருமணம் செய்து கொடுத்த பின்னர் ராமலட்சுமி தனியாக மேல ஆவாரம்பட்டியில் வசித்து வந்தார். இந்த நிலையில் பிரிந்து சென்ற கணவர் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனக் கூறி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடந்துள்ளது. அப்போது அங்கு வந்த ஐயாச்சாமி வழக்கை திரும்ப பெற கோரி ராமலட்சுமியிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இன்று காலை வெகு நேரம் ஆகியும் வீட்டில் இருந்து ராமலட்சுமி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வாயில் ரத்தம் வழிந்த நிலையில் ராமலட்சுமி படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். வடக்கு காவல் துறையினர் ராமலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமட்சுமியின் முன்னாள் கணவர் ஐயாச்சாமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி