ராஜபாளையத்தில் தடுப்புச் சுவற்றில் பேருந்து மோதி விபத்து

1887பார்த்தது
ராஜபாளையத்தில் சென்டர் மீடியனில் ரிப்ளெக்டர் இல்லாததால் தனியார் சுற்றுலா பஸ் மோதி விபத்துக்கு உள்ளானதில் அதிர்ஷ்டவசமாக 40 பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினர்.

விருதுநகரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 பேர் சிவகாசி அருகே விளாம்பட்டியில் உறவினர்களை ஏற்றிக்கொண்டு வெம்பக்கோட்டை- ராஜபாளையம் ரோட்டில் நேற்று காலை தனியார் பஸ் குற்றாலம் நோக்கி வந்தது. அதிகாலை பாரதி நகர் எதிரில் தனியார் பள்ளி அருகே வந்தபோது சென்டர் மீடியன் இருந்தது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன் பகுதி சக்கரத்துடன் சேதமடைந்தது.

கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வேகத்தை குறைத்ததால் பயணித்த குழந்தைகள் பெண்கள் உட்பட 40 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். முன்பகுதி சேதமடைந்ததால் வாகனத்தை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டு தொழிற்சாலை குடியிருப்பு மெயின் ரோடு என்பதால் இரண்டு மணி நேரத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இப்பகுதி சென்டர் மேடையில் எச்சரிக்கை செய்யும் வகையில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் அமைத்தும் இரண்டு பக்கம் ரோட்டில் தாழ்வாக படர்ந்துள்ள மரக்கிளைகள், கடை விளம்பர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you