விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், இக்கூட்டத்தில் மத்திய அரசின் 53 துறைகளைப் பற்றிய ஆய்வு நடைபெற்றது. என்றும் மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் விருதுநகர் மாவட்டம் நான்காவது இடத்தில் உள்ளது என்றார். தாய் தந்தையர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் மத்திய அரசின் வத்சலா திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஒரு நபருக்கு கூட இரண்டு ஆண்டுகளாக எந்த பணமும் வழங்கப்படவில்லை, இதுகுறித்து பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது என்றும் சில அரசு உதவி பெறும் பள்ளிகளில் நன்கொடைகள் வாங்குவதாக சாத்தூர் மதிமுக எம். எல். ஏ ரகுராமன் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார், பொதுக் கழிப்பிடங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்து அடுத்த கூட்டத் தொடரில் முடிவெடுக்கப்படும்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இப்போது மக்களிடையே மிகப் பெரிய அளவிலே அதற்கான ஆதரவு தொடர்கிறது. கடந்தாண்டு விட இந்த ஆண்டு 11% பேருக்கு 100% 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த முறை அது 20% உயர்ந்திருக்கிறது என்றார்.