அருப்புக்கோட்டையை தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள்

52பார்த்தது
*

*அருப்புக்கோட்டையில் மூன்று திரையரங்குகளில் வெளியான கோட் திரைப்படம்; தாரை தப்பட்டை, விஜய் பேனருக்கு பாலாபிஷேகம், தேங்காயில் சூடம் ஏற்றி உடைத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்த விஜய் ரசிகர்கள்*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம் மூன்று திரையரங்குகளில் வெளியானது. சிறப்பு காட்சிகள் இல்லாமல் வழக்கம் போல அனைத்து திரை அரங்குகளிலும் 10: 30 மணி அளவில் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் திரைப்படம் வெளியிட்டிற்கு முன் திரையரங்கு முன் குவிந்த விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னரே திரையரங்கம் முன் கூடிய விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடனும், விஜய் பேனருக்கு ‌பாலபிஷேகம் செய்தும் தேங்காயில் சூடம் ஏற்றி பேனருக்கு தீபாரதனை காண்பித்து தேங்காய் உடைத்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். மொத்தத்தில் அருப்புக்கோட்டையில் கோட் திரைப்பட வெளியீட்டை விஜய் ரசிகர்கள் தெறிக்க விட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி