விபத்தில் விவசாய கூலி தொழிலாளி பலி

3313பார்த்தது
விபத்தில் விவசாய கூலி தொழிலாளி பலி
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் பைபாஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் கார் மோதி விவசாயக் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி; பந்தல்குடி போலீசார் விசாரணை. அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் செல்வராஜ்(50). விவசாய கூலி வேலை செய்து வந்த செல்வராஜ் நேற்று (1. 1. 24) பந்தல்குடி பைபாஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் சாலையோரம் நின்று கதிர் அடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக தாறுமாறாக அதிவேகத்தில் தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாரதவிதமாக மோதி செல்வராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து கார் ஓட்டுனர் மதுரையைச் சேர்ந்த மூர்த்தி(45) என்பவர் மீது பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி