டாடா ஏஸ் தண்ணீர் வாகனம் மோதி இருவர் படுகாயம்

51பார்த்தது
டாடா ஏஸ் தண்ணீர் வாகனம் மோதி இருவர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(62). விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கணேசன் அங்குள்ள டூ வீலர் ஒர்க் ஷாப் முன்பு தனது பைக்கை நிறுத்தி காற்று அடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த டாடா ஏஸ் தண்ணீர் வாகனம் எதிர்பாராத விதமாக மோதி கணேசன் மற்றும் மெக்கானிக் நாகராஜன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் நேற்று ஏப்ரல் 16 டாடா ஏஸ் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி