சொக்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்ற நிகழ்வு

82பார்த்தது
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட
பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட
மிகவும் பழமை வாய்ந்த ஸ்தலமாக இத்திருக்கோயில் விளங்கிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோவில் ஆனி பிரமோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று பிரமோற்சவ விழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழா கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக கொடிமரத்திற்கு பல்வேறு வகையான அபிசேகங்கள் நடைபெற்றது. ‌
கொடியேற்றத்தை முன்னிட்டு மீனாட்சி சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கொடி மரத்திற்கும், உற்சவர் மற்றும் மூலவருக்கும் சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. ‌இந்த கொடியேற்ற விழாவில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வரும் 19ஆம் தேதி, திருத்தேரோட்டம் வரும் 20ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி