விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புளியம்பட்டி சாலியர் உறவின் முறை நிர்வாகிகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சந்தித்து பேசினார். நெசவுத்தொழில் அதிகம் செய்யும் சாலியர் சமுதாய மக்கள் தங்கள் தொழிலில் உள்ள குறைகளை
மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர்.
அப்போது 1985 இல் இயக்கப்பட்ட கைத்தறி சட்டத்தை மாற்றி அமைக்கவும் விசைத்தறி தொழிலில் உள்ள குறைகளை நீக்கவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்தான் மக்களுக்கு தேவையில்லாத 1500 சட்டங்கள் விலக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு மெகா டெக்ஸ்டைல் பார்க்கில் ஒன்று அருப்புக்கோட்டையில் அமைய உள்ளது அருப்புக்கோட்டையில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களின் குறைவினை போக்க ஜவுளித்துறை அமைச்சரிடம் பேசி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.