அருப்புக்கோட்டை எஸ் பி கே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டம் பயிலும் மாணவி சுவேதா கோயமுத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். இந்நிலையில் தங்கப்பதக்கங்களை குவித்த மாணவி சுவேதாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அந்த மாணவிக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது மாவட்ட நகர ஒன்றிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.