அருப்புக்கோட்டை உஜ்ஜிசாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் முகாம் நடைபெற்றது.
பிப்ரவரி 20
விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை உஜ்ஜிசாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது. மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். மேலும் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.