அரியலூர்: ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த தம்பதி சின்னப்பா (45) - பச்சையம்மாள் (43). மதுவுக்கு அடிமையான சின்னப்பா போதையில் மனைவியை அடித்து சித்திரவதை செய்தார். நேற்று (டிச. 17) சின்னப்பா மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் பச்சையம்மாளை கைது செய்தனர். விசாரணையில் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் இரும்பு கம்பியால் அவரை அடித்தும், கத்தியால் மர்ம உறுப்பை அறுத்தும் அவர் கொன்றது தெரியவந்தது.