ஜம்மு காஷ்மீர்: கதுவா மாவட்டத்தில் இன்று (டிச., 18) அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஷிவ்நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 9 பேரில் 6 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும் மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் சடலங்களை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.