அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரில் திறந்தவெளியில் குப்பைகள் மலை போல் கொட்டப்பட்டு கிடந்தது. இதனை அடுத்து இன்று நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் "தூய்மையாக இருங்கள் நோயின்றி இருங்கள்" திட்டத்தின் கீழ் புது முயற்சியாக அங்கு இருந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு அங்கு அழகிய வண்ணக் கோலம் இடப்பட்டது.
மேலும் திறந்த வெளியில் குப்பைகளை கொட்ட மாட்டோம் என அப்பகுதி மக்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.