அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெத்தம்மாள்(35). இவருக்கும் இவரது உறவினர் விஸ்வநாதன் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக விஸ்வநாதன் மற்றும் குருநாதன் ஆகிய இருவர் சேர்ந்து பெத்தம்மாளை அசிங்கமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பெத்தம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய போலீசார் நேற்று
ஜுலை 29 விஸ்வநாதன் மற்றும் குருநாதன் இருவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.