பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய லுக்கில் இருக்கும் விடியோவை ஆஸ்திரேலியாவின் பிரபல சிகையலங்கார நிபுணர் ஜோர்டான் தபக்மேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 'கிங்'கிற்கு புத்தி கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. விராட்கோலி எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்" என்று ஜோர்டான் தபக்மேன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.