இதய நோய்களின் ஆபத்து 45 வயதிற்குப் பின்னர் கணிசமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. இது போன்ற நிலையை தடுப்பதற்கு லண்டன் மருத்துவர்கள் 50 வயது மேற்பட்டவர்களுக்கு பாலிபில் என்கிற மருந்தை பரிந்துரைத்துள்ளனர். விரைவில் பிரிட்டனில் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த ஒரு மாத்திரையானது 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.