டெல்லியில் இந்திய வெளியுறவுச் சேவை (IFS) அதிகாரி சாணக்யபுரி பகுதியில் உள்ள கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணையில் அதிகாரியின் பெயர் ஜிதேந்திர ராவத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பற்றிய மேலும் விவரங்கள் வெளியாகவில்லை.
தற்கொலை ஒரு தீர்வல்ல. உளவியல் ஆலோசகர்களின் உதவியை நாட கட்டணமில்லா உதவி எண்: 1056-ஐ அழையுங்கள்.