பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

60பார்த்தது
திண்டிவனத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய விபரங்களை வெளியிடக்கூடாது என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக தற்போது பாரத ஸ்டேட் வங்கியும், தேர்தல் பங்கு பத்திர விபரங்களை அளிக்கும் காலக்கெடுவை ஜூன் 30, 2024 வரை நீட்டித்து தருமாறு நேற்று ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது மிகப்பெரிய அயோக்கியத்தனமான செயல் என்றும், பா. ஜ. க. அரசுக்கு பாரத ஸ்டேட் வங்கி துணை போவதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டமானது தமிழக முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையின் முன்பு காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி