விழுப்புரத்தில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் வெள்ளத்தங்கம் மற்றும் போலீசார் நே ற்று மதியம் விழுப்புரம் நகரில் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது, முத்தோப்பு பகுதியில் சம்சுதீன் மகன் ஜலாவுதீன், 40; என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, 2, 175 குட்கா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த அலாவுதீன், 40; சாலாமே டை சேர்ந்த கோவிந்தன், 35; ஜலாவுதீன், 40; ஆகியோர் மீது வழக்கு பதிந்து, ஜலாவுதீன், அலாவுதீன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.