விக்கிரவாண்டியில் இல்லம் தேடி கல்வி திட்ட தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
வட்டார வளமையத்தில் நடந்த பயிற்சிக்கு, பள்ளி கல்வித்துறை உதவி திட்ட அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி, தன்னார்வலர்கள் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் வழிமுறைகள், மையம் துவங்கும் மற்றும் முடியும் நேரம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை வழங்கி, பயிற்சி புத்தகத்தை வழங்கினார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் உமாதேவி, திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மலா, கமலக்கண்ணன், கருத்தாளர்கள் கரோலின், இளையராஜா, சிறப்பு பயிற்றுனர் இருதயராஜ் உட்பட ஒன்றியத்திலிருந்து 120 பேர் பயிற்சியில் பங்கேற்றனர்.