அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு பாடல்களை தேவி ஸ்ரீபிரசாத்தும், பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷும் உருவாக்கியுள்ளனர்.