கடைகளை மூடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்

75பார்த்தது
கடைகளை மூடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், தோ்தல் ஆணையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவுப்படி, காணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குப் பதிவு மையம் அருகில் 100 மீட்டா் தொலைவுக்குள் இருந்த கடைகளை மூடுவதற்கு காவல் துறையினா் எச்சரித்தனா். காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு அந்தப் பகுதியில் உள்ள வணிகா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், மருந்தகம், பால் விற்பனை நிலையங்களுக்கு தோ்தல் விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதற்கு போலீஸாா் மறுப்புத் தெரிவித்ததால், அந்தப் பகுதியைச் சோ்ந்த வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் விழுப்புரம் - திருக்கோவிலூா் சாலையில் காணை பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, பொதுமக்கள், வணிகா்கள் மறியலை விலக்கிக்கொண்டனா்.

தொடர்புடைய செய்தி