முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு டிடிவி தினகரன் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக மக்களால் மனதார அம்மா என அழைக்கப்பட்ட வரலாற்றுத் தலைவி நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் இன்று. அவர்கள் பிறந்த இந்நாளில், மக்களை வஞ்சித்து ஏமாற்றும் திமுக அரசையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.