ஓட்டு எண்ணும் மையம் தேர்தல் அதிகாரி ஆய்வு

69பார்த்தது
ஓட்டு எண்ணும் மையம் தேர்தல் அதிகாரி ஆய்வு
விழுப்புரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு செய்தார்.

விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி தேர்வு செய்யப்பட்டு, ஓட்டு எண்ணுவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது. 6 சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வரிசை எண் அடிப்படையில் வைப்பதற்காக வரிசை எண் போடப்பட்டுள்ளது.

இந்த இடங்களை பார்வையிட்ட பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தொடர்ந்து கண்காணிக்கும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி