பா. ம. க. , வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

63பார்த்தது
பா. ம. க. , வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் பா. ம. க. , வேட்பாளர் முரளிசங்கர் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பா. ம. க. , வேட்பாளர் முரளிசங்கர், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வி. சாத்தனுார், பொன்னங்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கொங்கராம்பூண்டி, வி. சாலை, டி. புதுப்பாளையம், தென்பேர், சின்னத்தச்சூர், எசாலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.

பா. ம. க. , மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம். எல். ஏ. , மாவட்ட தலைவர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், கோபாலகிருஷ்ணன், ஏழுமலை, துணைச் செயலாளர் சதீஷ் , மாவட்ட அமைப்பு செயலாளர் தீனவேலு.

பா. ஜ. , மாவட்ட தலைவர் கலிவரதன், ஒன்றிய தலைவர் மோகன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், அ. ம. மு. க. , ஒன்றிய தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி, ஓ. பி. எஸ். , அணி ஒன்றிய செயலாளர் மோகன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி