போலி ஆவணம் தயாரித்து நில மோசடி

53பார்த்தது
போலி ஆவணம் தயாரித்து நில மோசடி
போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்தவர் முருகன், 54; கார் டிரைவரான இவர், கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி நன்னாடு கிராமத்தில் 1. 60 ஏக்கர் நிலத்தை வாங்கி, பட்டா மாற்றம் செய்து அனுபவித்து வந்தார்.

இந்நிலையில், பக்கத்து நிலத்தின் உரிமையாளரான விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலை, இந்திரா நகர் விஜயகுமார் போலி ஆவணம் தயாரித்து தனது முருகன் நிலத்தையும் சேர்த்து சேர்ந்தனுாரைச் சேர்ந்த லோகநாதனுக்கு விற்றுள்ளார்.

இதுகுறித்து முருகன் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், டி. ஐ. ஜி. , எஸ். பி. , மற்றும் டி. எஸ். பி. , க்கு பதிவு தபாலில் புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து முருகன், விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், முருகன் புகார் மீது வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்தது தொடர்பாக விஜயகுமார், லோகநாதன், பத்திர எழுத்தர் சம்பத், வளவனுார் சக்திவேல் மனைவி விஜயலட்சுமி, சிவக்குமார் மனைவி தேவி, சென்னை, கோடம்பாக்கம் சரவணன் மனைவி ஜீவா, நன்னாடு தட்சணாமூர்த்தி ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி