விழுப்புரம் அருகே பங்க் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று பிற்பகல் சாலாமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சாலாமேடு துரையரசன் நகரில் அதே பகுதியை சேர்ந்த சேகர் மனைவி செல்வி, 50; என்பவரது கடையில், குட்கா விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து, செல்வியை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.