இடைத்தேர்தல் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

81பார்த்தது
இடைத்தேர்தல் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனை
விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, விழுப்புரம் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி. பழனி தலைமை வகித்து பேசியதாவது: விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தோ்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதனால், அரசு அலுவலகங்களில் அரசியல் சாா்ந்த படங்கள், நலத்திட்ட வில்லைகள், பிரதமா்கள், முதல்வா்கள், அமைச்சா்களின் படங்கள் வைக்கக்கூடாது. அரசியல் கட்சியைச் சோ்ந்த மறைந்த தலைவா்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை. ஆனால், அவா்களின் சிலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள், கல்வெட்டுகள் கட்டாயம் மறைக்கப்பட வேண்டும். ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகளை அரசு, தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் தொடரலாம் என்றாா். கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி