திண்டுக்கல்: பூதிபுரம் ஊராட்சி ஆரம்பபள்ளியில் கூடுதல் வகுபறை கட்ட வங்கியில் பணம் எடுப்பதற்க்கு மோசடி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சி ஆரம்பபள்ளியில் கூடுதல் வகுபறைக்கு எஸ்எம்சி-யில் இருந்து வந்த கட்டிடம் நிதி ரூ.9லட்சத்து 13ஆயிரம் ஆகும். இந்த நிதியைக் கட்டிடம் கட்ட செலவினங்களுக்கு வங்கியில் பணம் எடுக்கும்போது எஸ்எம்சி கூட்டம் தீர்மானம் போட்டு எடுக்க வேண்டும்.
ஆனால் தலைமைஆசிரியர் சாந்தி கூட்டம் போடாமல் தீர்மானம் நோட்டில் உறுப்பினர்கள் கையெப்பம் கடந்த ஒரு வாரம் முன்புதான் வாங்கியுள்ளார். வங்கியில் இணைப்புக் கணக்கு வைத்துள்ளனர்.
காசோலையில் எஸ்எம்சி தலைவர் கையெழுத்து அவரே போட்டுகொண்டுள்ளார் இந்தக் காசோலையில் கையெப்பம் போடுவதே எனக்குத் தெரியாது என்கிறார். எஸ்எம்சி தலைவர் காசோலை மோசடி செய்த தலைமை ஆசிரியரைத் துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.