2025 ஜனவரியில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரும் காலமாகும். இதற்கு புதன் பெயர்ச்சியே காரணம். புதன் கிரகத்தின் முதல் பெயர்ச்சி ஜன., 4ஆம் தேதி தனுசு ராசிக்கும், ஜன., 24ஆம் தேதி மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறது. இதனால் மேஷம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு யோகம் ஏற்படும். பிரச்சனைகள் விலகும். வேலையில் சாதகமான மாற்றங்களைக் காணலாம். நீதிமன்ற விவகாரங்களில் தீர்ப்பு சாதகமாக அமையும். நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும்.