சந்தையில் சேவல் விற்பனை அதிகரிப்பு

55பார்த்தது
சந்தையில் சேவல் விற்பனை அதிகரிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை சந்தையில் நேற்று (டிச., 10) நாட்டுக்கோழி சந்தை நடைபெற்றது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சந்தைக்கு நூற்றுக்கணக்கான சேவல் மற்றும் நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தன. எடைக்கு ஏற்ப ரூ.2,000 முதல் 10 ஆயிரம் வரை கட்டு சேவல்கள் விற்பனையானது. குறிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி சேவல்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தரமான சேவல்களை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி