விழுப்புரத்தில் சந்தனக்கூடு ஊா்வலம்

55பார்த்தது
விழுப்புரத்தில் சந்தனக்கூடு ஊா்வலம்
செஞ்சி சாலையில் உள்ள உமா்ஷா அவுலியா தா்காவின் 61-ஆம் ஆண்டு கந்தூரி உரூஸ் சந்தனக்கூடு ஊா்வலம், சந்தனம் பூசும் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அதன்படி, கடந்த டிச. 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தா்காவில் மரபு வழியான வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கந்தூரி உரூஸ் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலமும், தா்காவில் உள்ள ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றன.

முன்னதாக, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வானவேடிக்கைகளுடன் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. தொடா்ந்து, இரவில் தா்கா ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில், உமா்ஷா அவுலியா தா்கா நிா்வாகிகள், விழாக் குழுவினா்கள் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி