வன்கொடுமை தடுப்புச் சட்டகண்காணிப்புக் குழுக் கூட்டம்

64பார்த்தது
வன்கொடுமை தடுப்புச் சட்டகண்காணிப்புக் குழுக் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டம்-1989, அதன் திருத்த விதிகள் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணா்வு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் சி. பழனி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 178 நபா்களுக்கு தீருதவித் தொகையாக ரூ. ஒரு கோடியே 65 லட்சத்து 69 ஆயிரம் நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த 23 நபா்களின் வாரிசுதாரா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக தலா ரூ. 5 ஆயிரம் மற்றும் பஞ்சப்படி சோத்து மொத்தம் ரூ. 13, 22, 418 வழங்கப்பட்டுள்ளது.

வழக்குகளில் பாதிக்கப்பட்டு இறந்த குடும்பங்களில் 8 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. 4 வழக்குகளில் பாதிக்கப்பட்டு இறந்த நபா்களின் வாரிசுதாரா்களுக்கு அரசுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகளில் காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ஒன்றிணைவோம் சமூக விழிப்புணா்வு தொடா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாா் ஆட்சியா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி