டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 3 பேர் கைது

73பார்த்தது
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 3 பேர் கைது
மரக்காணம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளரைத் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார், வில்வநத்தத்தைச் சேர்ந்தவர் நீலமேகம், 44; மரக்காணம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். கடைக்கு வந்த பிரம்மதேசத்தைச் சேர்ந்த விக்னேஷ், 24; விக்னேஷ்குமார், 26; ராஜ்குமார், 29; ஆகிய 3 பேரும் பீர் பாட்டில் வாங்கினர். அப்போது அரசு நிர்ணயம் செய்த விலையை விட ஒரு பீர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக கேட்டதாக நீலமேகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில், ஆத்திரமடைந்தவர்கள் பீர் பாட்டிலால் நீலமேகத்தை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி