விதிமீறல் போலீசார் வழக்கு

83பார்த்தது
விதிமீறல் போலீசார் வழக்கு
விழுப்புரம் அருகே தேர்தல் விதிமீறி கட்சி கொடிகள் கட்டியிருந்த தி. மு. க. , வி. சி. , நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டு காலனி குடிநீர்தொட்டி அருகே, தேர்தல் விதிகளைமீறி, அனுமதியின்றி தி. மு. க. , கட்சி கொடி நடப்பட்டிருந்தது. இது குறித்து, கருங்காலிப்பட்டு வி. ஏ. ஓ. , ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த தி. மு. க. , கிளை செயலர் வெங்கடேசன் மீது, காணை போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதே போல், வளவனூர் அடுத்த பரசுரெட்டிப்பாளையம் காலனி நுழைவு வாயில் பகுதியில், வி. சி. , கட்சியின் தோரணம் மற்றும் கொடிகள், தேர்தல் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தது. இது குறித்து, அப்பகுதி வி. ஏ. ஓ. , மாயாவதி அளித்த புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த வி. சி. , கிளை செயலர் கிருஷ்ணன், 35; மீது, வளவனூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.

தொடர்புடைய செய்தி