விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் அருகே உள்ளது ஸ்ரீ ஞானானந்த தபோவனம். ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று(அக்.11) இங்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பின்னர் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சுற்று வட்டாரத்தில் இருந்து வந்திருந்து, சுவாமியையும் அம்மனையும் தரிசித்து விட்டுச் சென்றனர்.