விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஏழுமடத்தியம்மன் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோயிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமையில் ராகு காலத்தில் பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று (ஜூலை 28) மாலை பூஜைகள் நடைபெற்றன. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.