திருட்டில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

56பார்த்தது
திருட்டில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி, குச்சிப்பாளையம் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குணசேகரன் மகன் நல்லசிவம் (எ) சிவா(22). பண்ருட்டி காத்தவராயன் புதுத்தெருவைச் சோ்ந்தவா் அருண் (21). இவா்கள் மீது திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவா்களின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் வகையில், விழுப்புரம் எஸ். பி. தீபக் சிவாச் பரிந்துரையின்படி, ஆட்சியா் சி. பழனி இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். அதன் பேரில், விழுப்புரம் மாவட்ட போலீஸாா் நல்லசிவம் (எ) சிவா, அருண் ஆகிய இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி