விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்தனர். இந்நிலையில், மாநாட்டு கூட்டத்தை பயன்படுத்தி சில நபர்கள் செல்போன்களை திருடியுள்ளனர். செல்போன் திருடியவர்களை கையும் களவுமாக பிடித்த மக்கள் தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.