தொலைத்தொடர்பு சேவைக்கான உரிமக் கட்டணத்தை (8%) குறைக்க அரசுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளது. இக்கோரிக்கையை அரசு ஏற்றால் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை குறைக்க வாய்ப்புள்ளது. இந்நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியதால், வாடிக்கையாளர்கள் BSNL சேவைக்கு தாவும் சூழல் ஏற்பட்டது, வாடிக்கையாளர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க நிறுவனங்கள் தற்போது அரசை நாடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.