சென்னை மெட்ரோ ரயிலில் இளம்பெண்ணை ரகசியமாக புகைப்படம் எடுத்த ஜெயகிருஷ்ணன் (50) என்ற நபரை போலீசார் இன்று (அக். 28) கைது செய்துள்ளனர். நந்தனம் மெட்ரோ நிலையம் அருகே ரயில் வந்தபோது, 100 அவசர அழைப்புக்கு போன் செய்து இளம்பெண் புகாரளிக்கவே, போலீசார் விரைந்து வந்து அவரை பிடித்தனர். ஜெயகிருஷ்ணனின் செல்போனை சோதனை செய்ததில் ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரிக்கப்படுகிறது.