விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.