விழுப்புரம்: மூதாட்டியின் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை

4092பார்த்தது
விழுப்புரம்: மூதாட்டியின் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை
அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியைச் சேர்ந்தவர் காசியம்மாள், 85; அருகில் இருக்கும் கல்லந்தல் கிராமத்தில் வள்ளலார் மடத்தை அமைத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக அன்னதானம் செய்து அங்கேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர் கடந்த 1ம் தேதி மதியம் 12: 00 மணி அளவில் இறந்தார். அப்பொழுது அவரது மகன் செந்தில்குமாரும் உடன் இருந்தார். உறவினர்களுக்கு தகவல் சொல்வதற்காக சென்ற செந்தில்குமார் வர காலதாமதமானதால், மடத்தில் இருந்த சிலர் அன்று மாலையே உடலை அடக்கம் செய்துவிட்டனர்.

செந்தில்குமார் உறவினர்களுடன் வந்து பார்த்தபோது உடல் அடக்கம் செய்யப்படிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, புதைக்கப்பட்ட காசியம்மாவின் உடலை நேற்று கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம் முன்னிலையில், தோண்டி எடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் மணிகண்டன், வெண்ணிலா தலைமையிலான மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி