முன்விரோத தகராறில் வாலிபருக்கு 3ஆண்டு சிறை தண்டனை

70பார்த்தது
முன்விரோத தகராறில் வாலிபருக்கு 3ஆண்டு சிறை தண்டனை
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த திம்மிரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர்கள் லாசர் மகன் ஜான் போஸ்கோ (22), தேவராஜ் மகன் பிரசாந்த் (25), தினகரன் (25). இவர்கள் தரப்பினருக்கும், கீரிமேடு கலர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் ரமேஷ் (32) தரப்பின ருக்கும் இடையே சிறு, சிறுபிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 29. 3. 2020 அன்று நிலத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஜான் போஸ்கோ உள்ளிட்ட 3 பேரையும் ரமேஷ் தரப்பினர் வழிமறித்து தகராறு செய்து சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கினர். இதில் காயமடைந்த ஜான்போஸ்கோ, பிரசாந்த், தினகரன் ஆகிய 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ரமேஷ் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த வெங்கடேசன் (63), கமல் (24), தர்மன் (40), சிலம்பரசன் (32), மணிமாறன் (33), சுரேஷ் (43), சதீஷ் (30) ஆகிய 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து SC ST வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்யஜோதி, குற்றம் சாட்டப்பட்ட ரமேசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், மற்ற 7 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி