கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

50பார்த்தது
கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அருகே ஏனாதிமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட எரளூர் கிராமத்தில் கரும்பு பயிர்வது குறித்து விவசாயிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு, கரும்பு அலுவலர் கோபிசிகாமணி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதில், கரும்பு பயிரை இயந்திரம் வைத்து அறுவடை செய்ய ஏற்றாற்போல் 5 அடி இடைவெளி விடவேண்டும் எனவும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார். கரும்பு பெருக்கு உதவியாளர்கள் தங்கவேல், கோபாலகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் அன்பழகன், ராசு, கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி