விழுப்புரம் மாவட்டம், சின்னசெவலை பகுதியில் உள்ள, திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக அளவில் AI கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூர் AI தொழில் நிறுவனத்தின் தலைமை பொறியாளர் சாய் நாராயணன் கலந்து கொண்டு AI குறித்து விளக்கி கூறினார். இந்த கருத்தரங்கில் தலைமை பேராசிரியர் புவனேஸ்வரி கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.