சாரதா வித்யாஷ்ரம் பள்ளி விளையாட்டு விழா

50பார்த்தது
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி விளையாட்டு விழா
திருக்கோவிலூர் சாரதா வித்யாஷ்ரம் சி. பி. எஸ். இ. , பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.

திருக்கோவிலூர், சாரதா வித்யாஷ்ரமம் சி. பி. எஸ். இ. , பள்ளியின் மூன்றாம் ஆண்டு விளையாட்டுப் விழா பள்ளி விளையாட்டு அரங்கில் நடந்தது. தாளாளர் பிரபு முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பால்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி, விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.

பள்ளியின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடந்தது.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி