ரயில்வே பாலம் ஓரத்தில் கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

82பார்த்தது
ரயில்வே பாலம் ஓரத்தில் கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
விழுப்புரம் ரயில்வே பாலத்தின் ஓரம் மீன், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில், ரயில்வே மேம்பாலம் ஓரத்தில் உள்ள காலி இடங்களில், மீன், இறைச்சி கழிவுகள் மற்றும் உணவகங்களில் சேரும் குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். மேம்பாலத்தின் கீழ்பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ள பகுதியின் அருகே கழிவுகள், குப்பைகள் கொட்டுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் ரயில்வே காலனி மக்கள், வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிழக்கு பாண்டி ரோடு ஓரமாக கடைகள் வைத்துள்ள சிலர், இந்த கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டுவதால், ரயில்வே பாலத்தின் தடுப்பு சுவர் பகுதியில் சுகாதார சீர்கேடு தொடர்வதால், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி