திருவெண்ணைநல்லூரில் பணம் திருட்டு போலீசார் விசாரணை

62பார்த்தது
திருவெண்ணைநல்லூரில் பணம் திருட்டு போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூா், புதிய காந்தி நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். இவரது மனைவி தென்னரசி. இருவரும், திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து ரூ. 80 ஆயிரம் பணம் பெற்றனா். அந்தப் பணத்தை மொபெட்டில் வைத்துக் கொண்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது காா்த்திகேயன் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள தனியாா் திருமணம் மண்டபம் அருகே பழக்கடையில் பலாப்பழம் வாங்கியுள்ளாா். பின்னா் வீடு சென்று பாா்த்தபோது மொபெட்டில் வைத்திருந்த ரூ. 80 ஆயிரத்தைக் காணவில்லையாம். இது குறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி