திருக்கோவிலூர் அருகே விபத்து மூதாட்டி இறப்பு

53பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவில் அடுத்துள்ள டி. அத்திப்பாக்கம் சோதனை சாவடி அருகே திருவண்ணாமலையிலிருந்து வந்த வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேரி கார்டில் மோதி விபத்துக்குள்ளானதில், வேனில் பயணம் செய்த மூதாட்டி பாப்பம்மாள் (77) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி